Skip to main content

Posts

Showing posts from May, 2020

பரிமேலழகரும் அவரது திருக்குறள் உரையும்

வாய்மொழியாக நூற்றாண்டுகள் கடந்து வந்த நூல்கள் பல. ஏன்? ஓலைச்சுவடிகளாக இருந்தபோதிலும் அவை படிப்பதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இல்லாத காரணத்தால். ஆதலால் குறிப்பிட்ட சில நூல்கள் மட்டுமே காலத்தை வென்று நின்றது. அவற்றுள் நாம் அறிந்த திருக்குறளுக்கு மிக தொண்மைவாய்ந்த உரையானது பரிமேலழகரின் உரை. இந்நூலினது காலம் 10ஆம் நூற்றாண்டுக்கு 15ஆம் நூற்றாண்டுக்கும் நடுவே என வரையறுக்கப்படுகிறது. இக்காலமே தமிழ் உரைநடை செழித்து வளர்ந்தோங்கியது. இதையே தமிழ் உரைநடையின் பொற்காலம் எனவும் போற்றுகின்றனர் அறிஞர் பலர். திருக்குறள் மற்றும் பரிமேலழகர் உரை தொகுப்பு - மூலம் பரிமேலழகர் பெயர்க்காரணம் பரிமேலழகர் பரிமேலழகியார், பரிமேலழகியான், பரிமேலழகரையான் எனவும் கூறப்படுவார். பரி என்றால் குதிரை; மேல் அழகர் - எனவே குதிரை மேல் வீற்றிருக்கும் அழகர் பெருமாள் என பெயர் காரணம்    பரிமேலழகர் காலம்  இவரைப்பற்றிய தெளிவான வரலாறு கிடைத்திலது. இவர் காஞ்சி அல்லது மதுரையைச் சேர்ந்தவர் என சிலர் குறிப்பிடுகின்றனர். இவர் வாழ்ந்த காலம் 13ஆம் நூற்றாண்டு என அவர் தாமே தம் உரைக்கு எழுதிய குறிப்பு...